×

மதுராந்தகம் பகுதியில் நீர் ஆவியாவதை தினமும் 2 முறை கண்காணிக்கும் வானிலை ஆய்வாளர்கள்

மதுராந்தகம், ஏப். 23: மதுராந்தகம் பகுதியில் தினமும் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக 4 மி.மீ நீர் ஆவியாவதை தினமும் 2 முறை வானிலை ஆய்வாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியான செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த பருமழையின்போது கன மழை பெய்து ஏரிகள், குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. ஜனவரி மாதம் இறுதியில் மழை பெய்து ஓய்ந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக வறண்ட வானிலையுடன் கடுமையான வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இதனால், இந்த பகுதிகளில் பனிப்பொழிவும் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், கோடை அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே கடந்த மாதங்களில் இரவு நேரங்களில் பனிப்பொழிவும், பகல் நேரங்களில் கடுமையான வெயிலும் சுட்டெரிக்க தொடங்கியது. இதனிடையே, ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் பனிப்பொழிவு முற்றிலும் குறைந்து வறண்ட வானிலையுடன் கடுமையான வெயிலின் தாக்கம் அதிகரித்ததின் காரணமாக மதுராந்தகம் பகுதியில் கடந்த சில தினங்களாக 104 டிகிரி வெயில் சுட்டெரிப்பதால் காற்றின் ஈரப்பதம் 49 சதவீதமாக குறைந்து வருகிறது. இதனால், பகல் நேரங்களில் 39 மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் கடுமையாக சுட்டெரிக்கும் வெயிலினால் அனல் காற்று மாலை 5 மணி வரை வீசுகிறது. கடும் வெயிலின் தாக்கத்தால் பருவமழையின்போது நிரம்பி வழிந்த ஏரி, குளங்கள், குட்டைகள், கிணறுகள் உள்ளிட்ட நீர் நிலையில் தினமும் 4 மில்லி மீட்டர் அளவிற்கு தண்ணீர் ஆவியாகி வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளில் தேங்கியிருந்த தண்ணீரின் அளவு கிடு கிடுவென குறைந்து வருகிறது.

மேலும், வானிலை குறித்து மதுராந்தகம் அருகே உள்ள மேலவலம்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள முழு வானிலை மையத்தில் சூரியனின் வெப்பம் நிலை, காற்றின் வேகம், ஈரப்பதம், நீர் ஆவியாதல், காற்றின் திசை, காற்றின் வேகம் போன்ற வானிலையின் அம்சங்களை நவீன கருவிகள் மூலம் வானிலை ஆய்வாளர்கள் தினமும் காலை 8 மணிக்கும், மாலை 5மணிக்கு என 2 முறை ஆய்வு செய்து தகவல்களை சேமித்து வருகின்றனர். மேலும், இணைய வழியாகவும் சென்னை வானிலை மையத்தில் இருந்தபடியே தானியங்கி முறையில் இப்பகுதியில் நிலவும் வானிலையை கண்காணித்து வருகின்றனர். பகல் நேரங்களில் 39 மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் கடுமையாக சுட்டெரிக்கும் வெயிலினால் அனல் காற்று மாலை 5 மணி வரை வீசுகிறது. கடும் வெயிலின் தாக்கத்தால் பருவ மழையின்போது நிரம்பி வழிந்த ஏரி, குளங்கள், குட்டைகள், கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலையில் தினமும் 4 மில்லி மீட்டர் அளவிற்கு தண்ணீர் ஆவியாகி வருகிறது. இதன் காரணமாக, நீர்நிலைகளில் தேங்கியிருந்த தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது.

தினமும் வானிலை மையத்தில் ஆய்வு
மதுராந்தகம் அருகே உள்ள மேலவளம்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள வானிலை மையத்தில் மின்னணு வெப்பநிலை கருவி, காற்றின் ஈரப்பதத்தை அறியும் ஹைட்ரோ மீட்டர், காற்றின் வேகம் அரிய உதவும் அனிமோன் மீட்டர், காற்றின் திசை காட்டி, பனிப்பொழிவு அளவீடு, சூரியன் எத்தனை மணி நேரம் பிரகாசிக்கிறது என்பதை அறியும் கேம்ப்பெல் ஸ்டோக்ஸ் ரெக்கார்டர் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தி தினமும் வானிலை ஆய்வு செய்யப்படுகிறது.

மக்கள் அச்சம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கடுமையான வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், அனல் காற்று வீசுகிறது. இதனால், சாலைகளில் கானல் நீரை காண முடிகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் தலை காட்டவே அச்சப்படுகின்றனர்.வெயில் காரணமாக தலைவலி, மயக்கம், உடல் உஷ்ணம், சரும நோய்கள், உடல் சோர்வு ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இதன் காரணமாக அரசு மற்றும் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

The post மதுராந்தகம் பகுதியில் நீர் ஆவியாவதை தினமும் 2 முறை கண்காணிக்கும் வானிலை ஆய்வாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Madhurandakam ,Madhuranthakam ,Chennai ,Chengalpattu ,Kanchipuram ,Madurathangam ,
× RELATED செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப்...