×
Saravana Stores

திருப்திபடுத்தும் அரசியலை எதிர்க்கட்சிகள் நாடுகின்றன: பாஜ விமர்சனம்

புதுடெல்லி: ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பது தெளிவானதால் எதிர்க்கட்சிகள் திருப்திபடுத்தும் அரசியலை நாடியுள்ளதாக பாஜ விமர்சித்துள்ளது. பாஜ செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, ‘‘கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் நிரஞ்சன் ஹையர்மாத்தின் மகள் நேகா(23) படுகொலை செய்யப்பட்டுள்ளார். கல்லூரி வளாகத்தில் நேகாவை குத்திய பயாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தை போலீசாரிடம் மகளின் கொலையில் தொடர்புடைய 8 பேரின் பெயர்களை கூறியும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. போலீசார் மேல் இருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் முதல்வர் சித்தாராமையா குற்றவாளியை பாதுகாக்கிறார். பாஜ தலைவர் நட்டா பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அல்லது முதல்வர் என யாரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்கவில்லை. கருத்துக்கணிப்பில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறுவது என்ற இலக்கை எட்டும் என்பது தெளிவாக தெரிவதால் எதிர்கட்சிகள் திருப்திபடுத்தும் அரசியலை நாடத்தொடங்கியுள்ளன. இந்துக்களுக்கு எதிரான செயல்திட்டங்கள் மற்றும் இந்தியாவிற்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்து வருகின்றன” என்றார்.

The post திருப்திபடுத்தும் அரசியலை எதிர்க்கட்சிகள் நாடுகின்றன: பாஜ விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,NEW DELHI ,NDA ,Gaurav Bhatia ,Nega ,Congress ,Niranjan Hyermath ,Karnataka ,Dinakaran ,
× RELATED பல லட்சம் கோடி தொகை நிலுவை ஜார்க்கண்ட்...