- மகா கும்பாபிஷேகம்
- Vennaimalai
- பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
- கரூர்
- பாலசுப்பிரமணியசுவாமி கோயில்
- திருப்பணி பரம்பரை
- அறங்காவலர்
- சொக்கலிங்கம்
- வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில்
கரூர், ஏப். 23: கரூர் வெண்ணைமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் திருப்பணி பரம்பரை அறங்காவலர் சொக்கலிங்கம் தலைமையில் குழு அமைத்து பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றது. கோயிலில் அமைந்துள்ள பிரதானமான கருவறை மண்டபம், கோயில் கருவறை சுற்றி தங்கத்தால் ஆன சொர்ண வேலைப்பாடு, ராஜகோபுரம் புதுப்பித்தல், கோயிலின் நுழைவாயில் அமைந்துள்ள படிகள் புதுப்பித்தல், அர்த்த மண்டபம் புதுப்பித்தல் பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புண்ணிய நதியில் இருந்து கொண்டு வரப்பட்ட நீரை இது மந்திரங்கள் ஓதி சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மேலும் மேள முழக்கத்துடன் ராஜகோபுரம் மற்றும் பிரதான கோயில்களுக்கு கொண்டு செல்லப்பட்டு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காண்பித்து ,பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம்
வழங்கப்பட்டது.
The post வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.