பல்லடம், ஏப்.23: பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையத்தில் மணி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக மணி தனது குடும்பத்துடன் வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றிருந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை திருடி சென்றனர்.
வீடு திரும்பிய வீட்டின் உரிமையாளர் மணி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். புகாரின் பேரில் பல்லடம் போலீசார் திருட்டு நடந்த இடத்தில் தடய அறிவியல் சோதனை நடத்தினர். இது குறித்து பல்லடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.