×

திறமையானவர்களுக்கு பதவி கிடைப்பதில்லை; நீதிபதிகள் தேர்வு நடைமுறையில் மாற்றம் தேவை: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வலியுறுத்தல்

சென்னை: நீதிபதிகள் தேர்வு நடைமுறையில் மாற்றம் தேவை என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோஹின்டன் நாரிமன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோஹின்டன் நாரிமன் கலந்துகொண்டு மறைந்த மூத்த வழக்கறிஞர் கோவிந்தசாமி நாதன் விருதை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அகில் குரேசிக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் நீதிபதி ரோஹின்டன் நாரிமன் பேசியதாவது: நீதிபதிகளை தேர்வு செய்யும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் முறையை வலுப்படுத்த வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்து திறமைகளின் அடிப்படையில் நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும்.

தற்போது, நீதிபதிகள் நியமனம் திருப்தியாக இல்லை. தகுதியானவர்களுக்கு பதவி கிடைப்பதில்லை. இங்கு விருது பெற்ற அகில் குரேசிக்கு திறமை இருந்தும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி கிடைக்கவில்லை. எனவே, திறமையானவர்களுக்கு பதவி கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும். சுதந்திரமான நீதித்துறை செயல்பாடு என்பதுதான் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு. அரசியலமைப்பின் ஒவ்வொரு சரத்தும் குறிக்கோள்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்கப்பட வேண்டும். எனவேதான், அரசியலமைப்பை கட்டி காத்துவரும் நீதித்துறைக்கு திறமையான நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றார்.

The post திறமையானவர்களுக்கு பதவி கிடைப்பதில்லை; நீதிபதிகள் தேர்வு நடைமுறையில் மாற்றம் தேவை: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,CHENNAI ,Former ,Judge ,Rohinton Nariman ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்...