- ஜகன் மோகன்
- சந்திரபாபு
- லோகேஷ்
- திருமலா
- சந்திரபாபு நாயுடு
- Naralokesh
- தெலுங்கு தேசம் கட்சி
- குண்டூர் மாவட்டம்,
- மங்கலகிரி சட்டமன்றத் தொகுதி
- நாரா பிரம்மினி
- மங்களகிரி
திருமலை: ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், மங்களகிரி சட்டமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சந்திரபாபுநாயுடுவின் மகன் நாரா லோகேஷ் ேபாட்டியிடுகிறார். இவரை ஆதரித்து லோகேஷ் மனைவி நாரா பிராமினி, மங்களகிரி கிராமத்தில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அங்குள்ள பூந்தோட்டத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களை சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்தார். மேலும் அவர்களுடன் சேர்ந்து பூப்பறித்தார்.
அப்போது பிராமினி பேசியதாவது: எப்போதும் மக்கள் நலனையே விரும்பும் சந்திரபாபு மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து 53 நாட்கள் சட்டவிரோதமாக சிறையில் வைத்தவர் ஜெகன்மோகன். வரும் தேர்தலில் ஜெகன் கட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். அமராவதிக்கு கடந்த காலத்தில் இருந்த புகழைக் கொண்டு வருவோம்.
மாநிலத்தில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து விட்டன. பெண்களுக்கு பாதுகாப்பின்மையால் அச்சத்தில் வாழ்கின்றனர். தரம் இல்லாத மதுவை அரசே விற்பனை செய்து ஏழைக்குடும்பங்களை சீரழிக்கின்றது. நடைபெற உள்ள தேர்தலில் சந்திரபாபு வெற்றிபெற்று முதல்வராக பதவியேற்ற பிறகு போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, வீட்டு வரி, மின்கட்டண உயர்வு போன்றவற்றால் மக்கள் பெரும் நிதி சுமைக்கு ஆளாகியுள்ளனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரின் ஆசியுடன், சந்திரபாபு அமராவதி தலைநகர் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வார்.
மாநிலத்திற்கு தொழில்களை ஈர்க்க வைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கப்படும். தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் அனைத்து தரப்பு மக்களின் கஷ்டங்களும் தீரும். லோகேஷ் வெற்றி பெற்றால் மங்களகிரி சட்டமன்றத் தொகுதி நாட்டிலேயே நம்பர்-1 ஆக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.
The post ஜெகன்மோகனுக்கு பாடம் புகட்ட வேண்டும்; கணவர் லோகேஷ் தொகுதியில் சந்திரபாபு மருமகள் ஆவேசம் appeared first on Dinakaran.