×

ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000 பணியிட உத்தரவுகளும் ரத்து: கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி

கொல்கத்தா: ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு விவகாரத்தில் 24,000 பணியிட உத்தரவுகளையும் ரத்து செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேற்குவங்க மாநில அரசின் நிதியுதவியில் செயல்படும் பள்ளிகளுக்கு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் பணி நியமனங்கள் கடந்த 2016ம் ஆண்டு நடந்தது.

சுமார் 24,000 பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டன. ஆனால் இந்த பணி நியமன விவகாரத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தேபாங்சு பசக் மற்றும் முகமது ஷப்பர் ரஷிதி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இன்று விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘கடந்த 2016ல் நடந்த ஆசிரியர் மற்று ஆசிரியர் அல்லாத பணிநியமன உத்தரவுகள் ரத்து செய்யப்படுகிறது. அப்போது பணி நியமனம் செய்யப்பட்டவர்கள், தங்களது சம்பளத்தை 6 வாரங்களுக்குள் திரும்ப வழங்க வேண்டும். மாநில அரசு புதியதாக ஆட்சேர்ப்பு நடத்த வேண்டும். இந்த வழக்கில் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தும். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மாநில அரசு நிதியுதவி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்திற்கும் பொருந்தும்’ என்று தீர்ப்பளித்தது.

The post ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000 பணியிட உத்தரவுகளும் ரத்து: கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Kolkata High Court ,KOLKATA ,Western State Government ,Dinakaran ,
× RELATED ராஜ்பவன் செல்ல பெண்கள் அச்சம் ஆளுநர்...