×
Saravana Stores

கேரளாவை பிரதமர் மோடி அவமானப்படுத்துகிறார்: முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம் : கேரளாவிற்கு தரவேண்டிய நிதியை ஒழுங்காக கொடுக்காமல் கேரளா மீது வீண்பழி சுமத்தி துரோகம் செய்வதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். பிரதமர் மோடி சமீபத்தில் ஒரு மலையாள பத்திரிகை நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பீகாரைப் போல கேரளாவில் வாரிசு அரசியலும், ஊழலும் அதிகரித்து விட்டது என்று கூறியிருந்தார். அதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார். காஞ்சங்காட்டில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியது: பிரதமர் மோடி தொடர்ந்து கேரளாவை அவமானப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். கேரளாவில் ஊழல் அதிகரித்து விட்டதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். எந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறினார் என தெரியவில்லை. கேரளாவில் ஒரு தொகுதியில் கூட பாஜ வெற்றி பெற முடியாது என அவருக்குத் தெரிந்து விட்டது.

அந்த வேதனையில் தான் பிரதமர் மோடி கேரளா மீது வீண் பழி சுமத்தி அவமானப்படுத்தி வருகிறார். இவ்வாறு கூறியதன் மூலம் கேரளாவை மட்டுமல்லாமல், பீகார் மாநிலத்தையும் அவர் அவமானப்படுத்தியுள்ளார். இந்தியாவிலேயே கேரளா தான் ஊழல் மிகவும் குறைந்த மாநிலமாகும். கேரளாவுக்கு கிடைக்க வேண்டிய நிதியை தடுப்பதன் மூலம் பிரதமர் மோடி கேரள மக்களுக்கு பெரும் துரோகம் செய்து வருகிறார். இதை கேரள மக்கள் மறக்க மாட்டார்கள். இந்த தேர்தலில் பாஜவை தோற்கடிக்க வேண்டும் என்பது தான் இந்தியா கூட்டணியின் முக்கிய லட்சியமாகும். யார் பிரதமர் என்பது குறித்து இப்போது விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post கேரளாவை பிரதமர் மோடி அவமானப்படுத்துகிறார்: முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Kerala ,CM ,Pinarayi Vijayan ,Thiruvananthapuram ,Chief Minister ,Bihar ,CM Pinarayi Vijayan ,Dinakaran ,
× RELATED நாட்டின் இளைஞர்களுக்கு அதிகபட்ச...