×

பீகாரில் என்டிஏ கூட்டணியின் ஒரே முஸ்லிம் எம்.பி. ஆர்ஜேடியில் ஐக்கியம்

பாட்னா: பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் லோக் ஜன சக்தி இடம்பெற்றுள்ளது. இக்கட்சியை சேர்ந்த சவுத்ரி மெகபூப் அலி கைசர் கடந்த 2019 மக்களவை தேர்தலில் கக்காரியா தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கக்காரியா தொகுதிக்கு 3ம் கட்டமான மே 7ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள லோக் ஜன சக்தி கட்சியை சேர்ந்த கக்காரியா மக்களவை உறுப்பினர் சவுத்ரி மெகபூப் அலி கைசர் நேற்று லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இணைந்தார். அவரை தேஜஸ்வி யாதவ் வரவேற்றார்.

The post பீகாரில் என்டிஏ கூட்டணியின் ஒரே முஸ்லிம் எம்.பி. ஆர்ஜேடியில் ஐக்கியம் appeared first on Dinakaran.

Tags : NDA ,Bihar ,Patna ,Lok Jana Shakti ,National Democratic Alliance ,Chaudhry Mehboob Ali Qaiser ,Lok Sabha ,Khakaria ,2019 ,Kakkaria ,Constituency ,Unity ,RJD ,Dinakaran ,
× RELATED நீட் வினாத்தாள் விற்பனை: முக்கிய குற்றவாளியை கைது செய்தது சிபிஐ