புதுடெல்லி: ரயிலில் பயணம் செய்வதே தண்டனையாகி விட்டது என ராகுல் காந்தி ஒன்றிய அரசை கடுமையாக தாக்கினார். ரயிலின் தரையிலும், கழிவறையிலும் மக்கள் பயணம் செய்யும் வீடியோவை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பகிர்ந்து உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிடுகையில், மோடியின் பாஜ ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வது தண்டனையாகி விட்டது.சாமானிய மக்கள் பயணம் செய்யும் பொது பெட்டிகளை குறைத்து எலைட் ரயில்களை ஒன்றிய அரசு ஊக்குவிக்கிறது.பணத்தை கொடுத்து டிக்கெட் பெற்றாலும் அவர்களால் இருக்கைகளில் அமர்ந்து பிரயாணம் செய்ய முடிவதில்லை. ரயில்வே துறைகளின் கொள்கைகளை திருத்தி அதை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜ இறங்கியுள்ளது. இந்த காரணத்தை சொல்லி அவரின் நண்பர்களுக்கு ரயில்வேயை விற்பதற்கு திட்டமிட்டுள்ளார். சாதாரண ஏழை மக்களின் போக்குவரத்து அமைப்பை காப்பாற்ற வேண்டுமானால் மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
The post மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகி விட்டது: ராகுல் தாக்கு appeared first on Dinakaran.