×
Saravana Stores

பணமோசடி தடுப்புச் சட்டத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைது: ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடி

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் பணமோசடி தடுப்புச் சட்டத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அனில் துதேஜா என்பவர் கைது செய்யப்பட்டார். சட்டீஸ்கர் மாநில ஐஏஎஸ் அதிகாரி அனில் துதேஜா என்பவர் கடந்த ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். வருமான வரித்துறையின் புகாரின் அடிப்படையில் அனில் துதேஜா மீதான எப்ஐஆரை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது.

மதுபான ஊழல் வழக்கில் அவர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. மேலும் ராய்ப்பூர் மாநகராட்சி மேயர் அன்வர் தேபரின் மூத்த சகோதரர் அன்வர் தேபர் தலைமையில் ரூ.2,000 கோடி ஊழல் மற்றும் பணமோசடி நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சட்டீஸ்கரில் விற்கப்படும் ஒவ்வொரு மதுபாட்டிலில் இருந்தும் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேற்கண்ட புகாரின் அடிப்படையில் அனில் துதேஜா மற்றும் அவரது மகன் யாஷ் ஆகியோர் மாநில ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் மகன் விடுவிக்கப்பட்டார்; அனில் துதேஜா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அனில் துதேஜா நீதிமன்றக் காவலில் அனுப்பி வைக்கப்பட்டார்.

The post பணமோசடி தடுப்புச் சட்டத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைது: ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடி appeared first on Dinakaran.

Tags : IAS ,Raipur ,Anil Thudeja ,Chhattisgarh ,Income Tax Department ,Dinakaran ,
× RELATED லாரி மீது கார் மோதி சகோதரிகள், ஒருவர் பலி