- கனிலாங்கி
- தூத்துக்குடி
- கனிமொழி
- இந்தியா கூட்டணி
- தூத்துக்குடி மக்களவை
- சென்னை
- தூத்துக்குடி வஹைக்குளம் விமான நிலையம்
- டிடிஏ
- புதுக்கோட்டை
- ஆடுபிடாரம் சட்டமன்றத் தொகுதி
தூத்துக்குடி : தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி நேற்று காலை சென்னையில் வாக்களித்துவிட்டு விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டையில் டிடிடிஏ பிஎஸ் பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியை பார்வையிட்டு வாக்குபதிவு விபரங்களை அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘ஒன்றியத்தில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரவேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். நாட்டைக்காப்பாற்ற வேண்டிய தேர்தல் என மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால் இந்தியா கூட்டணி வெற்றி என்பது நிச்சயம். தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். அதன் மூலம் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும், அல்லது பழைய முறைப்படி வாக்குசீட்டு முறையை கொண்டு வர வேண்டும்’ என்றார்.
பின்னர் தூத்துக்குடி மில்லர்புரம் புனித செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியை பார்வையிட்டார். அப்போது அங்கு வாக்களிக்க வந்திருந்த ஒரு பெண் வைத்திருந்த குழந்தையை தூக்கி கொஞ்சி தனது மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். இந்த நிகழ்ச்சிகளின் போது வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் – மீனவர்நலன் மற்றும் கால்நடைபராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எஸ்.ஜே.ஜெகன், தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, துணைச்செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், தெற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் பொன்னப்பன், கந்தசாமி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் தங்கராஜ், மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், வட்டச்செயலாளர்கள் சுரேஷ், சரவணன், பெருமாள் கோவில்அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், பிரபாகர், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
The post ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்-தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேட்டி appeared first on Dinakaran.