×

குளத்தூர் வாக்குசாவடியில் சுயேட்சை வேட்பாளர் தர்ணா

குளத்தூர்,ஏப்.20: குளத்தூர் வாக்குச்சாவடியில் சுயேட்சை வேட்பாளர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரை சேர்ந்தவர் காந்திமள்ளர். இவர் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவருக்கு மிக்ஸி சின்னம் ஒதுக்கப்பட்டு வேட்பாளர் பட்டியலில் 13வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு தினமான நேற்று குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி எண்240ல் ஆய்வுக்கு சென்றார். அப்போது மைய வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த வேட்பாளர் பட்டியலில் வரிசைப்படி ஒட்டப்படவில்லையென கூறி வாக்குச்சாவடி மையத்திற்கு முன்பு அமர்ந்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் வணிதாராணி மற்றும் போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறிது நேரத்தில் ஒட்டப்பட்டுள்ள பட்டியலை மாற்றி ஒட்டப்படும் என சமாதானம் செய்தனர். இதன் பிறகே சுயேட்சை வேட்பாளர் காந்திமள்ளர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். திடீரென வாக்குச்சாவடி முன்பு வேட்பாளர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post குளத்தூர் வாக்குசாவடியில் சுயேட்சை வேட்பாளர் தர்ணா appeared first on Dinakaran.

Tags : dharna ,Kulathur ,Gandhimallar ,Thoothukudi ,Thoothukudi parliamentary seat ,Mixi ,Dinakaran ,
× RELATED தர்ணாவில் ஈடுபட்ட பாஜவினர் காதில்...