×

சர்கார் பட பாணியில் ஒருவர் வாக்குப்பதிவு

சென்னை: பெரம்பூர் தீட்டி தோட்டம் 5வது தெருவை சேர்ந்தவர் முகமது ரபிக். இவர், நேற்று காலை 9 மணியளவில் அங்குள்ள சிஎஸ்ஐ துவக்க பள்ளியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிக்க வந்தார். அங்கிருந்த அதிகாரிகள், ‘உங்களது வாக்கு செலுத்தப்பட்டு விட்டது’ என்றனர். இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். தனது வாக்கை வேறு ஒரு நபர் செலுத்தியது தொடர்பாக துறை அதிகாரிகளிடம் முகமது ரபி முறையிட்டார். போலீசாரிடம், தனது வாக்கை வேறு ஒருவர் பதிவிட்ட தகவலை தெரிவித்தார். அவர்கள் தேர்தல் அலுவலர் வெங்கடேசனிடம் முறையிட்டனர். பின்னர் அவரது ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, 49பி பிரிவின்கீழ் வாக்குப்பதிவு செய்ய அதிகாரிகள் அனுமதி வழங்கினர். விஜய் நடித்த சர்கார் படத்தில், 49பி பிரிவை பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட வாக்காளர் தனது வாக்கை பதிவு செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதேபாணியில் முகமது ரபிக், தனது வாக்கை பதிவு செய்து, வெற்றி புன்னகையுடன் வீடு திரும்பினார்.

The post சர்கார் பட பாணியில் ஒருவர் வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Sarkar ,CHENNAI ,Mohammad Rabiq ,5th Street, Thitti Garden, Perambur ,CSI Primary School ,
× RELATED வேலூர் மாநகராட்சி சர்க்கார் தோப்பில்...