- நெல்லி
- நய்னர்
- தேர்தல் ஆணையம்
- சென்னை
- உயர் நீதிமன்றம்
- நெல்லா
- பாஜா
- நயினார் நாகேந்திரன்
- திருநெல்வேலி
- ராகவன் உயர் நீதிமன்றம்
- நெல்லா பாஜா
- தின மலர்
சென்னை: நெல்லை தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராகவன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய், தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்திலிருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் ஆகியோரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு மீது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், பா.ஜ.க வேட்பாளரின் உதவியாளர்களிடம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புலன் விசாரணை நடந்து வருகிறது.
பாஜ வேட்பாளரின் உதவியாளர்களிடம் பெருந்தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், பணம் பறிமுதல் தொடர்பாக மனுதாரர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
The post உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் மீதான புகார் குறித்து நடவடிக்கை: தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.