- தொழிற்சங்க கூட்டமைப்பு
- சென்னை
- தமிழ்நாடு வர்த்தக மாநில சேம்பர்ஸ் கூட்டமைப்பு
- பொதுச்செயலர்
- கோவிந்தராஜுலு
- தொழிற்சங்க கூட்டமைப்பு
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்ட அறிக்கை: மக்கள் பிரதிநிதித்துவ சட்ட வழிகாட்டுதலின்படி வாக்களிப்பும், பணியாளர்களுக்கான ஊதியத்துடன் கூடிய விடுமுறையும், வணிக நிறுவனங்கள் அவசியம் பின்பற்றி வருகின்றன. கடைகளுக்கு விடுமுறை அளித்து ஜனநாயக உரிமையான வாக்களிப்பது எங்களின் கடமை.
மேலும் வணிகர்களுடைய ஓட்டு விற்பனைக்கு அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறோம்.
சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்கள் குடும்பத்தோடு இணைந்த வணிக நிறுவனங்கள் வாக்களித்த பின்னர் அன்றைய தினம், கடையை திறந்து நடத்துவதற்கு அனுமதி அளித்திட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்துகிறது. மேலும் தேர்தல் முடிந்த பிறகும் ஜூன் 4ம் தேதிவரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்குமானால் வணிகர்களும், வணிகமும் மிகப்பெரும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்.
தொடர்ந்து 2 மாத கால நெருக்கடியை வணிகர்களுக்கும், பொதுமக்கள், விவசாயிகளுக்கும் அளிப்பது இயற்கை நீதிக்கு முரணானது. தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் நடத்தை விதிமுறைகளை கட்டாயம் தளர்த்தி மாநில எல்லையில் மட்டுமே அமலாக்கம் செய்வதுதான் நியாயமானதாக இருக்கும் . எனவே தேர்தல் ஆணையம் இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கேட்டுக் கொள்கின்றது.
The post கடைகளுக்கு விடுமுறை அளித்து 100 சதவீதம் வாக்களிப்போம்: வணிகர் சங்க பேரமைப்பு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.