- சுப்ரியா சுலே
- பரமதி தொகுதி
- புனே
- தேசியவாத காங்கிரஸ் கட்சி
- சரத் பவார்
- மகாராஷ்டிரா
- துணை முதலமைச்சர்
- அஜித் பவார்
- லோக்
- சபா
- பாராமதி
- சரத் பவார்
புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்துவிட்டது. உண்மையான கட்சி இப்போது துணைமுதல்வர் அஜித்பவார் தலைமையிலான அணியிடம் உள்ளது. இந்த மக்களவை தேர்தலில் சரத்பவாரின் சொந்த தொகுதியான பாராமதியில் மீண்டும் அவரது மகள் சுப்ரியா சுலே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் பாராமதி தொகுதியில் தொடர்ந்து 3 முறை எம்பியாக உள்ள சுப்ரியா சுலே நேற்று மனுத்தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் தலைவர்கள் பாலாசாகேப் தோரட், விஸ்வஜீத் கடம் உள்ளிட்டோர் சென்றனர். அதே போல் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவாரும் நேற்று மனுத்தாக்கல் செய்தார். பாராமதி மக்களவைத் தொகுதிக்கு 3ம் கட்டமாக மே 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
The post பாராமதி தொகுதியில் சுப்ரியா சுலே மனுத்தாக்கல் appeared first on Dinakaran.
