- கவிஞர் வைரமுத்து
- மக்களவை
- சென்னை
- தலைமை தேர்தல் ஆணையம்
- 18 வது
- இந்தியாவின் லோக்சபா தேர்தல்
- மக்களவைத் தேர்தல்
- தின மலர்
சென்னை : வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்; சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.இந்தியாவின் 18வது மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 16ம் தேதி வெளியிட்டது. அதன்படி, 2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதனிடையே தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவிற்கும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த இண்டியா கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை பாணியில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
“விரலில் வைத்த கருப்புமை
நகத்தைவிட்டு வெளியேறச்
சில வாரங்கள் ஆகும்
பிழையான ஆளைத்
தேர்ந்தெடுத்துவிட்டால்
அநீதி வெளியேற
ஐந்தாண்டுகள் ஆகும்
சரியான நெறியான
வேட்பாளருக்கு வாக்களியுங்கள்
வாக்கு என்பது
நீங்கள் செலுத்தும் அதிகாரம்”, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற 5 ஆண்டுகள் ஆகும் : மக்களவைத் தேர்தலை மேற்கோள் காட்டி கவிஞர் வைரமுத்து ட்வீட் appeared first on Dinakaran.