- அமைச்சர்
- வாகன பிரசார
- சுப்பராயன்
- ஈரோடு
- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி
- அஇஅதிமுக
- பொத்தேனிகா அசோகுமார்
- ஈரோட் கிழக்கு
- ஈரோட் வெஸ்ட்
- modakurichi
- குமாரபாளையம்
- Tarapuram
- காங்கேயம்
- தின மலர்
ஈரோடு, ஏப். 18: ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், தாராபுரம், காங்கயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
இறுதி பிரசார நாளான நேற்று காலை ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், ஈவிஎன் சாலை, ஈரோடு பஸ் ஸ்டாண்ட், சத்தி சாலை, ஈரோடு மார்க்கெட், பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் திறந்த வாகனத்தில் நின்றபடி மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மக்களிடத்தில் பேசியதாவது:ஈரோடு நாடாளுமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் விரிவுப்படுத்தப்படும். ஈரோடு-பழனிக்கு புதிய ரயில் சேவை துவங்க ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். ஈரோடு கலெக்டர் அலுவலகம் முதல் திண்டல் வரை புதிய மேம்பாலம் அமைக்கப்படும். அதேபோல், ஈரோடு மாநகராட்சியின் எல்லைகள் விரிவுப்படுத்தப்படும்.
புதிதாக விரிவுபடுத்தப்படும் பகுதிகளில் மாநகராட்சியின் ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுத்தப்பட்டு, அப்பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். ஈரோட்டில் சாயக்கழிவுகளை அகற்றுவதற்கு காலிங்கராயன் வாய்க்காலையொட்டி தனி வாய்க்கால் அமைத்து கடல் வரை அந்த கழிவினை கடல் வரை கொண்டு செல்லும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்.
அனைத்து பகுதிகளிலும் தெரு மின் விளக்குகள், முக்கிய சந்திப்புகளில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும். மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலை பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். வாகன நெரிசலை குறைக்க அனைத்து தொகுதிகளிலும் மேம்பாலங்கள் அமைக்கப்படும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி மக்களின் வாழ்வதாரம் காக்க நடவடிக்கை எடுப்பேன். எனவே, எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாத்தின் போது, மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் தென்னரசு, சிவசுப்பிரமணி, முன்னாள் துணை மேயர் பழனிசாமி, ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் வீரக்குமார், பகுதி செயலாளர் மனோகரன், பகுதி அவை தலைவர் மீன் ராஜா என்ற ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post இ.கம்யூ., வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து அமைச்சர் வாகன பிரசாரம் appeared first on Dinakaran.