- 2 தொகுதி ஒடிசா முதலமைச்சர் போட்டி
- புவனேஸ்வர்
- ஒடிசா
- பிஜு ஜனதா தளம்
- ஜனாதிபதி
- முதல் அமைச்சர்
- ஒடிசா முதலமைச்சர் தொகுதியில் போட்டிய
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் மே மாதம் 13ம் தேதி தொடங்கி 4 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் பிஜூ ஜனதா தளம் சார்பில் 9 பேர் அடங்கிய 5வது வேட்பாளர் பட்டியலை பிஜூ ஜனதா தளத்தின் தலைவர் மற்றும் முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று வெளியிட்டார். அதன்படி நவீன் பட்நாயக், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
போலாங்கீர் மாவட்டத்தில் உள்ள கந்தபஞ்சி மற்றும் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ஹிஞ்சிலி சட்டப்பேரவை தொகுதியிலும் அவர் போட்டியிட உள்ளார். கடந்த 2019ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போதும் பட்நாயக் ஹிஞ்சிலி மற்றும் பிஜேபூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் பிஜேபூர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
The post 2 தொகுதியில் ஒடிசா முதல்வர் போட்டி appeared first on Dinakaran.