×

‘பாஜ நடத்தியது ரோடு ஷோ அல்ல; இறுதி யாத்திரை’ வாஜ்பாய் அரசை வீட்டிற்கு அதிமுக அனுப்பும்போது நீ குச்சிஐஸ் சாப்டிருந்திருப்ப… அண்ணாமலைக்கு வரலாற்றை ஞாபகப்படுத்திய சி.வி.சண்முகம்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாக்கியராஜை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி திண்டிவனத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பாஜ ஆட்சியில் அம்பானியும், அதானியும்தான் நல்லா இருக்காங்க. மக்கள் யாரும் நல்லாயில்லை. தேர்தலுக்கு பிறகு மோடி பாஜவில் இருக்கமாட்டார். அவர்களுக்கே தெரிந்துவிட்டது. அதிமுகவை அழிப்போம் என்று சொன்னாயே அண்ணாமலையே, உனக்கு ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்துகிறேன் தெரிந்துகொள். தமிழகத்தில் ஜெயலலிதாவை முறைத்த, வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய அன்றைய பாஜ ஆட்சியை, வாஜ்பாய் அரசை வீட்டுக்கு அனுப்பிவைத்த கட்சி அதிமுக. அப்ப நீ 9வது படிச்சிருப்ப. அன்றைக்கு உன் வயது 14. குச்சிஐஸ் சாப்டிருந்திருப்ப. உன்கட்சி தலைமையை கேட்டுபார்.

எங்களுக்கு சவால் விடுகிறாய். உன்னை காப்பாற்றிக்கொள்.பாஜவிற்கு இறுதிகாலம் வந்துவிட்டது தெரிஞ்சி போச்சி. அதனால்தான் ரோடு ஷோ நடத்துகிறார்கள். அது ரோடு ஷோ கிடையாது, இறுதியாத்திரை. மோடியின் அலங்கார வண்டி, அமித்ஷா செல்லும் வாகனம் நம்ம ஊரில் டெட் பாடி வண்டியைபோல் இருப்பதை கூர்ந்து பார்த்தால் தெரியும். அண்ணாமலை தன்னை சுற்றி 4 போலீசை வைத்திருக்கும் வரைதான் எல்லாம். நாங்கள் துப்பாக்கி இல்லாமலே பேசுவோம். நீங்கள் துப்பாக்கி வைத்த போலீஸ் வந்த பிறகுதான் பேசுவீர்கள். ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரம் இருந்தால்தான் நீங்கள் பேசுவீர்கள். நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

* ‘அன்புமணி குடும்பம் கொலைகார குடும்பம்’
சி.வி.சண்முகம் பேசுகையில், ‘இங்கு ஒருவர் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறார். அன்புமணியின்னு ஒருத்தர். தைரியம் இருந்தா பேசுங்கன்னு சொல்றார். நீங்க ரொம்ப தைரியம்தான். உங்க தைரியத்தையெல்லாம் நாங்க பாக்கல. தைரியம், ஆண்மை இருந்திருந்தால் உன்மீது போடப்பட்ட வழக்கை சந்தித்திருக்க வேண்டும். பேடிதனமாக சென்று பாஜவின் காலில் விழுந்தவர் நான் அல்ல. என்மீது 23 வழக்கு இருக்கு. அதற்காக நான் காலில் விழவில்லை. நீதிமன்றத்தில் தைரியமாக சந்தித்து கொண்டிருப்பவன். உன்னைபோல் கோழை அல்ல. அன்புமணி அவர்களே தேர்தலுக்கு பிறகு பார்க்கிறாயா?. நா ரெடி இன்னைக்குகூட வா?. உன் கொலைகார பசங்கள 2006லே பார்த்தவன்தான். கொலைகார குடும்பம் தாண்டா நீங்க?. நான் பாக்கலையா. உன் அச்சுறுத்தல், மிரட்டல், உருட்டலுக்கெல்லாம் பயப்படுறவ சண்முகம் கிடையாது.

உனக்குமுன்னாடி அரசியலுக்கு வந்தவன். உன் அப்பா அரசியலுக்கு வருவதற்கு முன்னே என் குடும்பம் அரசியலுக்கு வந்திருக்கிறது. நீ மட்டும் வன்னியர் சாதியில் பிறந்தமாதிரி, உன்கிட்டதான் வன்னியர் சர்டிபிகேட் வாங்கணுமா?. வன்னியர் பெயரை சொல்லி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிற ஈனபிறவி. எங்களை பற்றியோ, அதிமுகவை பற்றி பேசுவதற்கு அருகதை கிடையாது. இரவு போனை போட்டு எங்க அப்பா 40 ஆண்டுகால கனவை நிறைவேற்றி விட்டீர்கள் என்று அழுது கண்ணீர்விட்டு நடிச்சிங்களே. நாடகமாடினிங்களே. அது எந்த நாடகம். அன்று தெரியவில்லையா, என் வீட்டை தேடிவந்தபோது சண்முகம் இனிக்கவில்லையா,. நன்றிகெட்டவர் என்றால் அது அன்புமணிதான். இந்த பூச்சாண்டி, பித்தலாட்டம் எல்லாம் வேற யாரிடமாவது போய்காட்டு. இதையெல்லாம் பாத்துட்டு வந்துதான் உட்கார்ந்திருக்கிறோம்’ என்றார்.

The post ‘பாஜ நடத்தியது ரோடு ஷோ அல்ல; இறுதி யாத்திரை’ வாஜ்பாய் அரசை வீட்டிற்கு அதிமுக அனுப்பும்போது நீ குச்சிஐஸ் சாப்டிருந்திருப்ப… அண்ணாமலைக்கு வரலாற்றை ஞாபகப்படுத்திய சி.வி.சண்முகம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Vajpayee government ,CV ,Shanmugam ,Annamalai ,Bhakyaraj ,Villupuram parliamentary ,former ,minister ,CV Shanmugam ,Tindivana ,Ambani ,Adani ,BJP ,
× RELATED அவதூறு வழக்கு; சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்!