×
Saravana Stores

ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும் நம்முடன் வரை: டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் திமுக

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திமுக அசத்தி வருகிறது. ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும் நம்முடன் வரை பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், திராவிட சித்தாந்தத்தை தாங்கி நிற்கும் திமுகவின் செயல்பாட்டை, அனைவரது மத்தியிலும் எளிமையான நடையில் கொண்டு செல்லும் சமூக வலைதளப்பக்கம் தான் ‘எல்லோரும் நம்முடன்’ என்ற பக்கம். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், வாட்ஸ் ஆப், யூடியூப் என பல சமூக வலைதளங்களில், திராவிட சித்தாந்த கருத்துகளை, கடந்த 2021 முதல் மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் இப்பக்கம் இயங்குகிறது.

குறிப்பாக 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பின், பிஇஎன் என்ற நிறுவனம் மூலம், இந்த வலைதள பக்கம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. ’எல்லோரும் நம்முடன்’ என்ற சமூக வலைதள பக்கம் பெரும்பாலான இளையசமுதாயத்தினரை கவர்ந்து உள்ளது. இந்த பக்கத்தை சுமார் 50 லட்சம் பேர் இதுவரை பார்த்துள்ளனர். அதாவது தினமும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை ஸ்டாலினின் குரல் சென்று அடைகிறது. இதில் திமுகவின் தேர்தல் பிரசாரத்தை அடிப்படையாக கொண்ட சுமார் 10 ஆயிரம் பதிவுகள் இடம் பெற்றுள்ளன. 71 ஆயிரத்து 500 பேர் இந்த பக்கத்தை பின் தொடர்கிறார்கள். அதுபோல திமுகவின் பேஸ்புக் பக்கத்தை 3 லட்சத்து 29 ஆயிரம் பேரும், டிவிட்டரை 16 ஆயிரம் பேரும் பின் தொடர்கிறார்கள். திமுகவின் யூடியூப்பை 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கிறார்கள்.

The post ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும் நம்முடன் வரை: டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் திமுக appeared first on Dinakaran.

Tags : Stalin ,DMK ,Asathi ,
× RELATED சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கு...