- மோடி
- அண்ணாமலை அல்லக்கை
- சீமன்
- சீமான்
- காந்தி
- பெரம்பூர்
- கொளத்தூர்
- அமுடினி
- வட சென்னை
- நாம் தமிழ் கட்சி
- இந்தியா
- தின மலர்
நாம் தமிழர் கட்சி சார்பில் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அமுதினியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சீமான் நேற்று மதியம் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் காந்தி சிலை அருகே பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- தூய்மை இந்தியா என்றால் என்ன? குப்பையை அவர்களே கொண்டு வந்த கொட்டி, அள்ளி போஸ் தருகின்றனர். இது தான் தூய்மை இந்தியாவா? தாமரை தண்ணிரீல் கூட மலரும். தமிழன் கண்ணீரில் ஒரு நாளும் மலராது. தமிழகத்திற்கு 8 முறை வந்தீர்கள் பிரதமர் அவர்களே, இன்னும் கூட வாங்க, ஆனால், உங்களால் வெல்ல முடியாது. வரும் தலைமுறை வாழ்வதற்கு ஏற்ற வளமான நாடு வேண்டும். அதற்கான மாற்றத்தை நோக்கி பயணிக்கிறோம். நாங்கள் ஏன் கூட்டணி வைக்கவில்லை என்றால் சரணடைந்து வாழ்வதை விட, சண்டையிட்டு சாவதே மேல். நான் ஒத்தையா நிற்கிறேன்.
நான் ஏன் அண்ணாமலையுடன் சண்டையிட வேண்டும்? மோடியுடனே சண்டையிட தயார். அல்லக்கைகளுடன் சண்டையிட்டு எனக்கு பழக்கம் இல்லை. மோடியின் நிழலில் இல்லை என்றால் அண்ணாமலை அவ்வளவு தான். அவர் அ.தி.மு.க.வை அழிப்பேன் என்கிறார் எடப்பாடி பழனிசாமி அவர் உள்ளவரை அந்த கட்சியில் பொதுச் செயலாளராக இருப்பார். ஆனால் நீ எவ்வளவு நாள் பாஜவில் இருக்க முடியும் என்பதைப் பார்ப்போம். எங்களுக்கு மட்டும் புது சின்னம். அதிலும் பல தில்லுமுல்லு. எங்களைப் பார்த்து அவ்வளவு பயம். பா.ஜ.வில் அவ்வளவு ரவுடிகள். சாராய வியாபாரிகள், மணல் அள்ளி விற்றவன் எல்லாம் உள்ளனர். இவர்கள்தான் தற்போது கோவையில் அண்ணாமலைக்காக பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்றார்.
* விஜய் ஆதரவா?
கூட்டத்தில் சீமான் பேசுவதற்கு முன்பு அக்கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மைக்கை கையில் எடுக்கவா, கேம்பைனை ஸ்டார்ட் பண்ணவா என அண்ணன் பாடியுள்ளார். இதன் மூலம் அண்ணனின் மறைமுக ஆதரவு நமக்கு உள்ளது என தெரிவித்தார். இதற்கு விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
The post மோடியின் நிழலில் இல்லை என்றால் அவ்ளோதான்: அண்ணாமலை அல்லக்கையுடன் சண்டையிட நான் தயாரில்லை; சீமான் ஆவேச பேச்சு appeared first on Dinakaran.