×

ஸ்ரீபெரும்புதூர் தமாகா வேட்பாளரை ஆதரித்து: காலி நாற்காலிகள் முன்பு ஜி.கே.வாசன் பிரசாரம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தாம்பரம் சண்முகம் சாலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபாலுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்களை அதிகளவில் காட்டுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டிருந்தனர். கூட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு, வேட்பாளர் வி.என்.வேணுகோபாலுக்கு வாக்கு சேகரித்து, பேச தொடங்கிய சிறிது நேரத்தில் அழைத்து வரப்பட்டவர்கள் கொடிகளையும், சைக்கிள் சின்னத்தையும் சாலையில் தூக்கி எறிந்துவிட்டு புறப்பட்டு சென்றனர். இதனால், சில நிமிடங்களில் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் ஜி.கே.வாசன் காலி நாற்காலிகளுக்கு முன்பு பேசி வாக்கு சேகரித்தது, அப்பகுதியினரிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. வாக்குப்பதிவுக்கு முன்பே தமாகா வேட்பாளரின் தோல்வி வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என அவர்கள் முணுமுணுத்தனர்.

The post ஸ்ரீபெரும்புதூர் தமாகா வேட்பாளரை ஆதரித்து: காலி நாற்காலிகள் முன்பு ஜி.கே.வாசன் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Sriprahumutur ,Tamaga ,G. K. Propagation ,Sriprahumudur Constituency Tambaram ,Sanmugham Road ,Sriprahumudur ,V. N. ,Venugopal ,president ,G. K. Vasan Prasaram ,
× RELATED சமூக விரோத செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க ஜி.கே.வாசன் கோரிக்கை