×
Saravana Stores

நயினாரை தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய மனுவை இன்று விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறையிடம் மனு அளித்தேன்.

ஆனால், எந்த நடவடிக்கையுறம் எடுக்கவில்லை. வாக்காளர்களுக்கு தருவதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமெனாறு தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தேன். அதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்று மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் இம்மானுவேல் தலைமை நீதிபதி முன்பு நேற்று முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, இன்று விசாரிப்பதாக தெரிவித்தது.

The post நயினாரை தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nainar ,Court ,Madras High Court ,Election Commission ,Tirunelveli ,BJP ,Nayanar Nagendran ,Raghavan ,
× RELATED சிறை கைதிகளை சந்திக்க செல்லும்...