×

அண்ணன் ஜெயிச்சா உங்கள தங்கத்தட்டுல தாலாட்டுவாரு… விஜயகாந்த் மகன் உருட்டு

விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அவரது தம்பியும், நடிகருமான சண்முகபாண்டியன் பேசியதாவது: நமது குரலாக டெல்லியில் பேச ஒரு ஆள் வேண்டும். அதனால் விஜய பிரபாகரனை ஜெயிக்க வைத்து டெல்லிக்கு அனுப்பினால், உங்களது கஷ்ட, நஷ்டங்களை அவரது கஷ்டமா நினைத்து தீர்த்து வைப்பார். எங்க அண்ணனுக்கு ஒரே ஒரு ஆசை தான். ஜெயிச்சி வந்தால் தொகுதி மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்ட ஆசைப்படுகிறார். எங்க அப்பா விஜயகாந்தை பார்க்க முடியவில்லையே?. இன்னொரு வாட்டி பார்த்த நல்லா இருக்குமே என்ற ஆர்வம் உங்களுக்கு இருப்பது புரிகிறது. அந்த வகையில் எங்க அப்பாவின் மறு உருவமாக விஜய பிரபாகரன் தொகுதிக்கு வந்து நிற்கிறார். நமக்கு நல்லது செய்ய முடிவெடுத்து இருக்கார். இவ்வாறு பேசினார்.

The post அண்ணன் ஜெயிச்சா உங்கள தங்கத்தட்டுல தாலாட்டுவாரு… விஜயகாந்த் மகன் உருட்டு appeared first on Dinakaran.

Tags : Annan Jaicha ,Vijayakanth ,Sanmukhapandian ,DMD ,Vijaya Prabhakaran ,Virudhunagar ,Delhi ,
× RELATED வேலூர் அருகே சித்தேரி பகுதியில்...