×

மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாக புதுச்சேரி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் பரபரப்பு பேட்டி

புதுச்சேரி: மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாக புதுச்சேரி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் பணம் தருவதாக தமிழ்வேந்தன் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2 நாட்களாக வாக்காளர்களுக்கு பாஜகவினர் ஓட்டுக்கு ரூ.500 கொடுத்து வருவதாகவும், பணம் கொடுத்துதான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற சூழல் இருப்பதால் தேர்தலை புறக்கணிக்கிறேன் எனவும் தமிழ்வேந்தன் தெரிவித்துள்ளார்.

The post மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாக புதுச்சேரி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Puducherry AIADMK ,Tamilvendan ,Lok Sabha ,Puducherry ,AIADMK ,Tamilvendan Samshu ,BJP ,Namachivayam ,
× RELATED மக்களவை தேர்தலில் தோல்வி: அரசு...