×

திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பம்மல் பகுதிகளில் வீதி வீதியாக இ.கருணாநிதி எம்எல்ஏ பிரசாரம்

தாம்பரம், ஏப்.17: பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து, பம்மல் பகுதிகளில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி வீதி வீதியாக நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டு கால பாஜ ஆட்சியில் பொதுமக்கான எந்த ஒரு வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை. ஆனால், கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் கலைஞர் நூற்றாண்டு அரசு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டி, மக்கள் பயன்பாட்டில் உள்ளது. பாஜ அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை இன்றும் தொடங்கப்படவில்லை.

2014 நாடாளுமன்ற தேர்தலின்போது மோடி அறிவித்த கருப்பு பணம் ஒழிப்பு, அனைவரது வங்கி கணக்கிலும் தலா 15 லட்சம் செலுத்துவேன் உள்ளிட்ட எதையும் நிறைவேற்றவில்லை. 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்து வங்கி முன் பல மணி நேரம் மக்களை வரிசையில் நிற்க வைத்தார். ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். அதனையும் செய்யவில்லை.

காஸ் சிலிண்டர் விலையை 400ல் இருந்து 1000 ரூபாய் அளவுக்கு உயர்த்திவிட்டு, இப்போது 100 ரூபாய் குறைக்கப்படும் எனத் தேர்தல் நேரத்தில் பாஜ அறிவித்துள்ளது. இதுவும் ஏமாற்று வேலைதான். ஆனால், திமுக அரசு பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவேற்றி உள்ளது.
இதுபோன்ற மேலும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார்.

வாக்கு சேகரிப்பின் போது மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

The post திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பம்மல் பகுதிகளில் வீதி வீதியாக இ.கருணாநிதி எம்எல்ஏ பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Dimuka ,D. R. ,Pammal ,Baluwa ,Karunanidhi ,MLA ,Thambaram ,Thampudur Parliamentary Constituency ,Dimuka Candidate ,Ballavaram ,E. Karunanidhi ,Prasaram ,Dinakaran ,
× RELATED உதகையில் புதிய தொழில் நிறுவனம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்