×

சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும் அச்சுறுத்த முடியாது: பீகாரில் மோடி பிரசாரம்

பூர்னியா: ‘சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும் அச்சுறுத்த முடியாது’ என பீகாரில் பிரதமர் மோடி பிரசாரத்தில் கூறினார். அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசத்தின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பீகாரின் பூர்னியா மாவட்டம் மற்றும் கயாவில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:
வாக்கு வங்கி அரசியலுக்காக பூர்னியா மாவட்டத்தில் சட்ட விரோத குடியேற்றம் தடையின்றி அனுமதிக்கப்பட்டுள்ளது. இது கடுமையான பாதுகாப்பு அபாயங்களுக்கு வழிவகுக்கும். மேலும் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

எனவே நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சட்ட விரோத குடியேற்றத்திற்கு முடிவு கட்டுவோம். குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) எதிர்ப்பவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். மோடியை தடுத்து நிறுத்த முடியாது, அச்சுறுத்தவும் முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

The post சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும் அச்சுறுத்த முடியாது: பீகாரில் மோடி பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : CAA ,Modi ,Bihar Purnia ,PM Modi ,Bihar ,Purnia district ,Gaya ,Nepal ,Bangladesh ,Dinakaran ,
× RELATED சிஏஏ சட்டம் மக்களுக்கு முரணானது என...