- மத்திய அமைச்சர்
- ரூபாலா
- ராஜபுத்திரர்கள்
- ராஜ்கோட்
- பாஜக
- பர்ஷோத்தம் ரூபாலா
- குஜராத்
- சட்டமன்ற உறுப்பினர்
- பரேஷ் தனனி
- காங்கிரஸ்
- குஜராத் ராஜ்க
- மக்களவை
- தின மலர்
ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் பர்ஷோத்தம் ரூபாலா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். குஜராத் ராஜ்கோட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ பரேஷ் தனானி போட்டியிடுகிறார். இங்கு இரண்டுமுறை மக்களவை உறுப்பினராக இருந்த மோகன் குந்தாரியாவுக்கு இந்த தேர்தலில் பாஜ வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்கு பதிலாக ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா நிறுத்தப்பட்டுள்ளார்.
ராஜ்கோட்டில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரூபாலா, “முன்பு நாட்டை ஆண்ட மகாராஜாக்கள் வௌிநாட்டு ஆட்சியாளர்கள், ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து நடந்ததாகவும், அவர்களின் பெண்களை திருமணம் செய்து கொண்டதாகவும் பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜ்புத்திரர் சமூகத்தினர், ராஜ்கோட் வேட்பாளர் ரூபாலாவை மாற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.ஆனாலும் வேட்பாளரை மாற்ற பாஜ மறுத்துவிட்டது. தனக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் பர்ஷோத்தம் ரூபாலா நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரூபாலா, “தேசத்தின் நலனில் ராஜ்புத்திர சமூகத்தின் பங்களிப்பும் முக்கியம். அதற்கு நீங்கள் எனக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று கூறினார்.
The post ராஜ்புத்திரர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஒன்றிய அமைச்சர் ரூபாலா வேட்பு மனு தாக்கல் appeared first on Dinakaran.