- அண்ணாமலை
- தகவல் பெறும் உரிமை
- கர்நாடகா டிஜிபி
- பெங்களூரு
- டி. நரசிம்மமூர்த்தி
- கர்நாடகா மாநில பொலிஸ்
- டிஜிபி
- உடுப்பி
- சிக்கமகலூர் மாவட்டங்கள்
- தென் மண்டல பொது தகவல் அலுவலர்கள்
- தின மலர்
பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி, கர்நாடக மாநில போலீஸ் ஐஜி மற்றும் டிஜிபி, உடுப்பி, சிக்கமகளூரு ஆகிய இரு மாவட்டம் மற்றும் பெங்களூரு தெற்கு மண்டல பொது தகவல் அதிகாரிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள கடிதத்தில், தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவராக இருக்கும் அண்ணாமலை, கர்நாடக மாநில காவல் துறையில் பணியாற்றி பின் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
அண்ணாமலை எத்தனை ஆண்டுகள் கர்நாடக மாநில காவல் துறையில் பணியாற்றினார். என்னென்ன பதவியில் இருந்தார், எந்த மாவட்டங்களில் பணியாற்றினார். அவர் பணியில் இருந்தபோது, மாநிலத்தில் ஏதாவது போலீஸ் நிலையங்களில் அவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளதா? அப்படி தொடரப்பட்டிருந்தால், அதன் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்பது உள்பட முழு விவரம் கொடுக்க வேண்டும் என்று விண்ணப்பத்தில் கூறியுள்ளார்.
ஆர்டிஐ சட்டத்தில் விண்ணப்பம் செலுத்தி இருப்பதால், விரைவில் போலீஸ் துறை சார்பில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக டி.நரசிம்மமூர்த்தி தெரிவித்தார்.
The post அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு உள்ளதா?.. கர்நாடக டிஜிபிக்கு ஆர்டிஐ ஆர்வலர் கடிதம் appeared first on Dinakaran.