×

வேளாண் சட்டத்துக்கு ஆதரவு அதிமுக வேட்பாளரை விவசாயிகள் முற்றுகை

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு ரூ.400 கோடிக்கு மேல் நிலுவை தொகை வழங்காமல் வைத்துள்ளது. இந்த நிலுவைத்தொகையினை வழங்காததால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் 500 நாட்களுக்கும் மேலாக திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு நேற்று கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தும் திருமண்டங்குடி அருகே உள்ள பட்டவர்த்தி கிராமத்தில் வேட்பாளர் பாபு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனத்தை வழிமறித்து முற்றுகையிட்ட, வேளாண் சட்டத்துக்கு ஆதரவளித்துவிட்டு ஓட்டு கேட்க வர்றீங்களா? கரும்பு விவசாயிகள் எங்களது போராட்டத்திற்கு ஆதரவு தராமல் எங்கள் பகுதியில் ஏன் வாக்கு கேட்க வருகிறீர்கள். சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை கேட்டு 500 நாட்களை கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களை இத்தனை நாள் சந்திக்க வராமல் தற்போது ஓட்டு கேட்க மட்டும் எப்படி வருகிறீர்கள்’ என கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

The post வேளாண் சட்டத்துக்கு ஆதரவு அதிமுக வேட்பாளரை விவசாயிகள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Kumbakonam ,Vividantangudi ,Papanasam ,Thanjavur district ,
× RELATED தங்கையை காதலித்ததால் அதிமுக...