- பாஜக
- YouTube
- செல்லூர் ராஜு செம கலாய்
- அஇஅதிமுக
- அமைச்சர்
- செலூர் ராஜு
- மதுரை ரேஸ்கோர்ஸ்
- டாக்டர்
- சரவணன்
- யூனியன் அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசின் ஜிஎஸ்டியால் பொருட்களின் விலை ஏறி விட்டது. ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தொழில் வளர்ச்சிக்கான எதுவுமே செய்யவில்லை. தமிழகத்தை பொருத்தவரை அண்ணாமலை நன்றாக மாட்டிக்கொண்ட ஆடு. ஒரு பக்கம் சிங்கம், ஒரு பக்கம் சிறுத்தை என இடையில் ஆட்டுக்குட்டியாக மாட்டிக் கொண்டு, என்ன பேசுகிறோம் என தெரியாமல் பிதற்றுகிறார். எங்களுக்கு எதிரே திமுகதான் இருக்கிறது. மற்ற கட்சிகளெல்லாம் ஜூஜூபி. பாஜ வேட்பாளர் சீனிவாசன், நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கப்போகிறார். மதுரை ஆன்மீக பூமி.
இதைச் சொல்லி இங்கே ஓட்டு வாங்கலாம் என்று நினைக்கிறார்கள். இந்த கத்தரிக்காய் கதையெல்லாம் இங்கே நடக்காது. தமிழ்நாடு முழுவதுமே பாஜ கட்சி சும்மா யூடியூப்பில்தான் இருக்கிறது. டிரெய்லர் நல்லா இருக்கும். படம் சொதப்பி, பிளாப் ஆயிடும். பாஜ போடுவதெல்லாம் டிரெயிலர். ரிசல்ட் படம் பிளாப்புதான். பாஜவை மக்கள் ஏற்க மாட்டார்கள். மோடிஜி சாமி… நீங்கள்தானே பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள். ஏன் காமராஜர் ஆட்சியை கொடுக்கவில்லை? இதுவரை கொடுக்காத நீங்கள், இனிமேல் கொடுப்பேன் என்றால் என்ன அர்த்தம்? நீங்கள் சொன்னதை செய்யவில்லை. இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என மக்களை ஏமாத்துகிறீர்கள். இவ்வாறு கூறினார்.
* மானம், ரோசத்த விட்டுட்டு ஓபிஎஸ் இப்படியா நிற்பது?
செல்லூர் ராஜூ கூறுகையில், ‘ஒருத்தரு பாருங்க.. எங்களிடம் எப்படி இருந்த மனிதர் இன்றைக்கு பலாப்பழத்தை தூக்கிக் கொண்டு, அவர் நிற்கிற காட்சியை பாருங்க. பழம் பழுக்காது. அது அழுகிப் போகப் போகிறது. உண்மையில் மனசாட்சி இருக்கிறதா? நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக தனது மானம், ரோசம் எல்லாவற்றையும் விட்டு விட்டு, ஓபிஎஸ் அண்ணாமலை பக்கத்தில் நிற்கிறார். இந்த அண்ணாமலை எம்ஜிஆர், ஜெயலலிதா, பெரியாரை எவ்வளவு கொச்சைப்படுத்தணுமோ அப்படி பேசினார். ஓபிஎஸ் 3 முறை முதல்வராக இருந்ததற்கு யார் காரணம்? அந்த ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி அண்ணாமலை பேசுகிறார். இவர் கைகூப்பி நின்று ஓட்டு கேட்கிறார். ச்சே.. இதென்ன பொழப்பு’ என்றார்.
The post பாஜ கட்சி யூடியூபில்தான் இருக்கிறது: சிங்கம், சிறுத்தையிடம் சிக்கிய ஆட்டுக்குட்டி அண்ணாமலை; டிரெய்லர் நல்லா இருக்கும்… படம் பிளாப் ஆயிடும்… செல்லூர் ராஜூ செம கலாய் appeared first on Dinakaran.