×

பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன: சென்னை காவல் ஆணையர் பேட்டி

சென்னை: பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை 3 தொகுதிகளிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் தொகுதிகளில் சிலபகுதிகள் சென்னை எல்லைக்குள் வருகின்றன என்றும் கூறினார்.

The post பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன: சென்னை காவல் ஆணையர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Police Commissioner ,Sandeep Rai Rathore ,THIRUVALLIKKENI LADY ,Chennai Police ,Commissioner ,Dinakaran ,
× RELATED சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி மாற்றம்:...