×

சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில் பயங்கர தீ: மின்சாதன கோளாறு காரணமாக தீப்பற்றியதாக தகவல்

சென்னை: சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. சென்னை புளியந்தோப்பு பகுதியில் பெயிண்ட் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பாகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு பெயிண்ட் கடையில் இன்று காலை 9மணி அளவில் திடீரென தீ பிடித்தது. அந்த நேரத்தில் கடை திறக்கப்படவில்லை. எனவே அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் மற்றும் சென்னை மாநகராட்சி குடிநீர் லாரி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் தற்போது தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், பெயிண்ட் எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழந்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டது மின்சாதன கோளாறு காரணமாக தீப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

The post சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில் பயங்கர தீ: மின்சாதன கோளாறு காரணமாக தீப்பற்றியதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Battalion ,Chennai ,Battalam, Chennai ,Pulianthopu ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...