×

ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்

ஆந்திரா: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசியவர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என ஆந்திர மாநில காவல்துறை அறிவித்துள்ளது. விஜயவாடாவில் தேர்தல் பிரசாரம் செய்த போது ஜெகன் மோகன் ரெட்டி மீது கல் வீசப்பட்டது. கல் வீசிய மர்ம நபரை பிடிப்பதற்காக 6 தனிப்படை அமைக்கப்பட்டது. 3 நாட்களாக முயன்றும், மர்ம நபரை பிடிக்க முடியாத நிலையில் ஆந்திர போலீஸ் சன்மானம் அறிவித்தது.

The post ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம் appeared first on Dinakaran.

Tags : Stone ,Andhra CM ,Andhra Pradesh ,Andhra Pradesh Police ,Jagan Mohan Reddy ,Vijayawada ,Chief Minister ,Dinakaran ,
× RELATED சங்கராபுரம் அருகே 2 கல் சிலைகள் கண்டெடுப்பு