- தென் சென்னை தி.மு.க.
- தமிழாச்சி தங்கபாண்டியன்
- அமைச்சர்
- எம் சுப்பிரமணியன்
- சென்னை
- சைதாப்பேட்டை, சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சென்னை சைதாப்பேட்டையில் இருசக்கர வாகன பரப்புரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் வருகிற 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என குறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மாலையுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை நிறைவடையவுள்ளதால் சென்னை முழுவதும் இன்று தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சைதை மேற்கு பகுதி 142வது வட்டத்தில் இருசக்கர வாகன பரப்புரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈடுபட்டுள்ளார். சுமார் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த வாகன பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ளன. சென்னை சைதாப்பேட்டை பகுதியில் ஒவ்வொரு தெரு வழியாகவும் சென்று மக்களை சந்தித்து அமைச்சர் பரப்புரை செய்து வருகிறார்.
இந்த பரப்புரையானது கோடாமேடு அம்பேத்கர் திடலில் தொடங்கி தற்போது அப்துல் ரஹமத் தெருவை கடந்து ஜோன்ஸ் ரோடு, பஜார் ரோடு உள்ளிட்ட இந்த வட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து தெருக்களையும் உள்ளடங்கி வாகன பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, சுப்பிரமணியம் சாலையில் இந்த பிரச்சாரம் முடிவடையவிருக்கிறது. இதற்கு முன்னதாக இதேபோல் சைதாப்பேட்டையில் மற்றொரு பகுதியிலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.
The post தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து இருசக்கர வாகனத்தில் சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரப்புரை..!! appeared first on Dinakaran.