×

2026ல் பாமக தலைமையில் ஆட்சியா? இந்த நூற்றாண்டின் பெஸ்ட் காமெடி: அன்புமணி பேச்சுக்கு ஜெயக்குமார் ஒரே சிரிப்பு

வடசென்னை தொகுதிக்குட்பட்ட ஓட்டேரி பகுதியில் அதிமுக வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

முன்னதாக, அவர் அளித்த பேட்டி:
கருத்துக்கணிப்பு முடிவுகளை அதிமுக நம்பவில்லை. தேசிய கட்சி ஆளுகின்ற மாநிலங்களில் வளர்ச்சியே கிடையாது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்பு பாஜ தலைவராக ஓபிஎஸ்,பொதுச்செயலாளராக டிடிவி.தினகரன் இருப்பார். அண்ணாமலை காணாமல் போய்விடுவார். 2026ல் பாமக தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என்று அன்புமணி கூறியது இந்த நூற்றாண்டின் சிறந்த காமெடி. அனைவரையும் சிரிக்க வைக்க கூடியது. பாஜ எத்தனை ரோடு ஷோ செய்தாலும் வாக்கு வங்கி அதிகரிக்காது. பாஜ தேர்தல் அறிக்கை காகிதப்பூ. அது மலர் ஆகாது.

The post 2026ல் பாமக தலைமையில் ஆட்சியா? இந்த நூற்றாண்டின் பெஸ்ட் காமெடி: அன்புமணி பேச்சுக்கு ஜெயக்குமார் ஒரே சிரிப்பு appeared first on Dinakaran.

Tags : Jeyakumar ,Anbumani ,Former Minister ,Jayakumar ,AIADMK ,North Chennai ,Rayapuram Mano ,Otteri ,National Party ,BAM ,
× RELATED மருத்துவக் கல்வி வணிகமயமாவதை...