×

துப்பாக்கியுடன் இருக்கும் போட்டோ வைரல்; பாஜ வேட்பாளர் வினோஜ் பி செல்வம் ரவுடிகளின் தலைவனாக இருக்கலாம்: தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி பேட்டி

துப்பாக்கியுடன் இருக்கும் போட்டோ வைரல் ஆனதால், மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் ரவுடிகளின் தலைவனாக இருக்கலாம் என தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சமீபகாலமாக சமூக வலைதளத்தில் மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனை நானும் பார்த்தேன். பாஜவில் எல்லா ரவுடிகளையும் சேர்த்து வருகின்றனர். எனவே, இந்த ரவுடி கும்பலின் தலைவனாக கூட வினோஜ் பி செல்வம் இருக்கலாம் என நினைக்கிறேன். மேலும், துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் பழையதாக கூட இருக்கலாம். ஆனால், துப்பாக்கி வைத்திருக்கும் ரவுடிகளாக இருந்தால் உடனடியாக கைது செய்யப்படுகின்றனர். ஏன்? வினோஜ் பி செல்வத்தை கைது செய்யவில்லை.

இந்த துப்பாக்கிக்கு உரிமம் உள்ளதா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. இல்லை என தெரிந்தால் அவரை கண்டிப்பாக போலீசார் கைது செய்ய வேண்டும்.

The post துப்பாக்கியுடன் இருக்கும் போட்டோ வைரல்; பாஜ வேட்பாளர் வினோஜ் பி செல்வம் ரவுடிகளின் தலைவனாக இருக்கலாம்: தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Bajaj ,Vinoj B ,Parthasarathi ,Demudika ,Chennai ,BJP ,Selvam Rawudi ,Riches ,Demutika ,Dinakaran ,
× RELATED ஒரு கிலோ எரிவாயுவுக்கு 100 கி.மீ. தூரம்...