சேலம்: சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (45). இவர் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக ஜப்பான் சென்றுள்ளார். அங்கு நகாயமா நகரில் கிரியேட்டிவ் கன்சல்டென்டாக பணியாற்றி வருகிறார். ஆண்டுக்கு ஒரு முறை இந்தியா வந்து செல்லும் சங்கர், தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஜப்பானில் குடியுரிமை கிடைத்தும், அதை ஏற்காமல் இந்திய குடிமகனாக தனது வாக்கினை செலுத்துவதற்காக மட்டும் வந்துள்ளே. ஜப்பானில் இருந்து வந்து செல்ல ஒரு லட்சம் ரூபாய் வரை செலவானாலும் வாக்களிப்பது நம் ஜனநாயக கடமை. தனது வாக்கினை முறையாக செலுத்துவதன் மூலம் மனநிறைவு பெறுகிறேன். ’ என்றார்.
The post ஓட்டுப்போட ஜப்பானில் இருந்து பறந்து வந்த சேலம் வாக்காளர் appeared first on Dinakaran.