- அரிஜர் அண்ணா உயிரியல் பூங்கா
- தம்பரம்
- வண்டலூர்
- அரிஞ்சார் அண்ணா உயிரியல் பூங்கா
- அரிஞ்சர் அண்ணா உயிரியல் பூங்கா
- தின மலர்
தாம்பரம்: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: இந்த வருட கோடை விடுமுறையை மேலும் உற்சகமாகவும், அறிவு நிரம்பியதாகவும் மாற்ற, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மாணவர்களுக்கான ‘உயிரியல் பூங்கா தூதுவர்’ திட்டத்தை அறிவித்துள்ளது. 5ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பு படிக்கும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.
பல்வேறு வகையான வனவிலங்குகளை பற்றி அறிந்து கொள்ளும் வகையில், தனித்தனி வகுப்புகளாக பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பூங்காவின் செயல்பாடுகளை மாணவர்கள் அறியும் வாய்ப்பு பெறுவார்கள். ஒவ்வொரு தலைப்புக்கும் மாணவர்களுக்கு பயிற்சி தாள்களுடன் நிகழ்ச்சிக்கு வேண்டிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்படும். இம்முகாம் 3 நாட்கள் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும்.
ஒவ்வொரு வகுப்பிலும் 50 மாணவர்கள் கோடை தட்பவெப்ப நிலையை கருத்தில் கொண்டு 5 பிரிவுகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. 24.4.2024 முதல் 27.4.2024 வரை, 1.5.2024 முதல் 3.5.2024 வரை, 8.5.2024 முதல் 10.5.2024 வரை, 5.6.2024 முதல் 7.6.2024 வரை, 12.6.2024 முதல் 14.6.2024 வரை, ஒவ்வொரு பிரிவிலும் 50 மாணவர்கள் வரை கலந்து கொள்ளலாம். நிகழ்ச்சியின் முடிவில், பங்கேற்பாளர்களுக்கு ‘வண்டலூர் உயிரியல் பூங்கா தூதர்’ என்ற சான்றிதழ், பேட்ஜ் வழங்கப்படும்.
மேலும் 10 முறை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குச் வந்து செல்ல இலவச கடவுச்சீட்டும் வழங்கப்படும். பங்கேற்கும் மாணவர்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவின் தூதராக இருப்பதோடு, உயிரியல் பூங்காவை மேம்படுத்துவதிலும், உயிரியல் பூங்கா விலங்குகளைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்காற்றுவார்கள். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க www.aazp.in/summercamp2024/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
The post அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப் appeared first on Dinakaran.