- பாஜக
- மம்தா
- கூச் பெஹர்
- மம்தா பானர்ஜி
- திரிணாமூல் காங்கிரஸ்
- பொதுச்செயலர்
- அபிஷேக் பானர்ஜி
- பெஹலா
- கொல்கத்தா
கூச்பெஹார்: பாஜ தலைவர்கள் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் ஹெலிகாப்டர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவார்களா என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் பொது செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் பிரசாரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வரும் ஹெலிகாப்டர் கொல்கத்தாவில் உள்ள பெஹலா பிளையிங் கிளப்பில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த ஹெலிகாப்டரை வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனையிட்டனர்.
இது அதிகாரிகளின் அத்துமீறிய செயல் என திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில்,கூச்பெஹாரில் நேற்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி,‘‘ அபிஷேக் பானர்ஜி பிரசாரத்துக்கு பயன்படுத்தவிருந்த ஹெலிகாப்டரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.ஹெலிகாப்டரில் தங்கம்,பணம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் சோதனை நடந்ததாகவும் இதில், எதுவும் கிடைக்கவில்லைஎன அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. இதே போல் பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவார்களா?. முதல் கட்ட தேர்தல் நடப்பதற்கு முன்னர் தேசிய புலனாய்வு அமைப்பு மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்ய பாஜ திட்டம் வகுத்துள்ளது’’ என்றார்.
The post பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை சோதனையிடுவீர்களா? ஐடி அதிகாரிகளுக்கு மம்தா சவால் appeared first on Dinakaran.