திருவனந்தபுரம்: வாக்காளர்களுக்கும், கிறிஸ்தவ பாதிரியார்களுக்கும் பணம் கொடுத்ததாக ஒரு டிவி பேட்டியில் தெரிவித்த சசி தரூர் மற்றும் டிவி சேனலுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் சசி தரூர் ஒரு மலையாள டிவி சேனலுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பாஜ வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரம் தொகுதியிலுள்ள கிறிஸ்தவ பாதிரியார்களுக்கும், வாக்காளர்களுக்கும் பணம் கொடுப்பதாக கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவனந்தபுரம் மாவட்ட பாஜ தலைவர் ராஜேஷ் தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதை விசாரித்த தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உடனடியாக விளக்கம் அளிக்க சசி தரூருக்கும், டிவி சேனலுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
அந்த விளக்கம் திருப்தி இல்லாததால் சசி தரூருக்கும், மலையாள டிவி சேனலுக்கும் தேர்தல் ஆணையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும், சர்ச்சையான பகுதியை நீக்கிய பின்னரே டிவியில் பேட்டியை ஒளிபரப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
The post சசி தரூருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை: பாஜ வேட்பாளர் மீது குற்றச்சாட்டு appeared first on Dinakaran.