×

கள்ளழகர் திருவிழா.. ஏப்ரல் 23ம் தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

மதுரை: வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் ஏப்ரல் 23ம் தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரையில் உலக பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும், இந்த திருவிழா ஏப்ரல் 12ம் தேதி தொடங்கி ஏப்ரல் 23ம் தேதி வரை நடைபெறும். சித்திரை திருவிழாவின் நடைபெறும் நாட்களில் தினமும் இரவு சுவாமி அம்பாள் 4 மாசி வீதிகளில் உலா வருகிறார்கள். அப்போது மாசி வீதிகள் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும்.

மேலும், ஏப்ரல் 21ம் தேதி கள்ளழகர் அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி புறப்படுகிறார். ஏப்ரல் 22ம் தேதி காலை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெறுகிறது. ஏப்ரல் 23ம் தேதி அதிகாலை 5.51 மணியிலிருந்து 6.10 மணிக்குள் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும். இதை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் குவிந்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாளான ஏப்ரல் 23ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 11ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

 

The post கள்ளழகர் திருவிழா.. ஏப்ரல் 23ம் தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Clown Festival ,MADURAI DISTRICT ,DISTRICT GOVERNOR ,MADURAI ,DISTRICT ,VIAGAI RIVER ,Chitrai festival ,Meenakiyamman Temple ,Madura ,Kallazhagar Festival Local ,Governor ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை