- சிவன்மலை முருகன் கோயில்
- தமிழ்
- சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில்
- திருப்பூர்
- அமாவாசை
- சஷ்டி
- கிருத்திகை
- பூர்ணமி
- தமிழ் புத்தாண்டு
காங்கயம், ஏப்.15: திருப்பூர் மாவட்டத்தில் பிரசத்தி பெற்றது சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோயில் ஆகும். இங்கு அமாவாசை, சஷ்டி, கிருத்திகை, பௌர்ணமி போன்ற தினங்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள். நேற்று தமிழ் புத்தாண்டு துவங்கியதையொட்டி சிவன்மலை முருகன் கோவில் ஆதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேக பூஜைகள் நடைபெற்று அலங்கரங்கள் செய்யப்பட்டன.
தமிழ் வருடப்பிறப்பையொட்டி பஞ்சங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி பக்தர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த குரோதி ஆண்டில் பஞ்சங்கத்தில் குறிப்பிட்டுள்ள நன்மை, தீமைகள் வாசிக்கப்பட்டது. வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் பக்கதர்களுக்கு அருள்பாலித்தார். 12 மணிக்கு உச்சிக்கால விஷேச பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது. தமிழ் புத்தாண்டில் சிவன்மலையில் பக்தர்கள் பலமணிநேரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்திருந்ததால் மக்கள் வெள்ளத்தில் சிவன்மலை சூழ்நிதிருந்தது. புது வருடத்தை முன்னிட்டு வர்த்தகம் செய்வோர் புதுக்கணக்கு துவக்கினர். காங்கயம் அடுத்துள்ள காடையூர் காடையீஸ்வரசாமி கோயில், பாப்பினி பெரியநாயகியம்மன் கோவில், மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் கோவில்கள்,
அகிலாண்டபுரம் அகஸ்த்தீஸ்வரர் மற்றும் அகிலாண்டீஸ்வரி கோயில், பழையகோட்டை ரோட்டில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், மெயின்ரோடு பேட்டை மாரியம்மன் கோயில், ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோவில், நத்தக்காடையூர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோயில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
The post தமிழ்ப்புத்தாண்டில் சிவன்மலை முருகன் கோயிலில் பஞ்சாங்கம் வாசித்து சிறப்பு பூஜை appeared first on Dinakaran.