×

வாக்காளர்களுக்கு குக்கர் கொடுக்கும் பாஜ வேட்பாளர்: வீடியோ வைரல்

காரைக்கால் அடுத்த எம்.ஜி.ஆர் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் புதுச்சேரி ஆளும் என்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜ வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு வாக்களிக்க கோரி குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்களை வீடுதோறும் சென்று கொடுத்து உள்ளனர். இதனை அறிந்த ஊர் மக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவறிந்த தேர்தல் பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததை அடுத்து குக்கர் வழங்கியவர்கள் பாதி குக்கர்களை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். குக்கர் வழங்கும் வீடியோவும், அந்த பகுதிக்கு சென்ற காரைக்காலை சேர்ந்த அமைச்சர் திருமுருகன் உதவியாளரை சூழ்ந்து அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகளும் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

The post வாக்காளர்களுக்கு குக்கர் கொடுக்கும் பாஜ வேட்பாளர்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : BJP ,MGR Nagar ,Tsunami ,Karaikal ,Puducherry ,NR Congress party ,Namachivayam ,Dinakaran ,
× RELATED ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சாலை மறியல்