- ராம் கோயில்
- பாஜக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி
- கார்த்தி சிதம்பரம்
- அரந்தாங்கி பஞ்சாயத் ஒன்றியப் பகுதி
- புதுக்கோட்டை மாவட்டம்
- பாஜக அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய பகுதியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
பாஜ அரசு புதிதாக கோயில் ஒன்று கட்டி உள்ளது. அந்த சர்சைக்குள் நான் போக விரும்பவில்லை. நம்பிக்கை உள்ளவர்கள் கோயிலுக்கு போகட்டும். ஆனால் அந்த கோயிலை அரசாங்கம் கட்டவில்லை. அந்த கோயிலை ஒரு தனியார் டிரஸ்டு மூலம் கட்டி உள்ளனர். அந்த டிரஸ்டுக்கு ₹3 ஆயிரம் கோடி உள்ளது. அந்த டிரஸ்டுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கவும் ஏற்பாடு செய்து அங்கு இருந்து ₹8 ஆயிரம் கோடி வரப்போகிறது. அந்த பணத்திற்க்கு எந்த வரியும் கிடையாது. மொத்தம் அந்த டிரஸ்டின் இருப்பு தொகை ₹11 ஆயிரம் கோடி.
இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த கோயில்களுக்கு தொடர்பு உள்ள மாநிலங்களில் உள்ள பெரிய கோயில்கள் எல்லாம் இந்த தனியார் டிரஸ்டுக்கு உள்ளே கொண்டு வந்து விடுவார்கள். அதில் தமிழ்நாட்டில் கோயில் ராமேஸ்வரம் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆகிய இரண்டு கோயில்களையும் அவர்கள் குறி வைத்துள்ளனர். இந்த கோயிலை அந்த தனியார் டிரஸ்டுக்கு உள்ளே கொண்டு சென்று விட்டால் இந்த டிரஸ்ட் இந்த கோயிலை எப்படி நிராவாகம் செய்ய வேண்டும். எப்படி சாமி தரிசனம் செய்ய வேண்டும்.
கோயிலுக்கு உள்ளே யார் யார் வரவேண்டும். கோயிலுக்கு வெளியே கோயிலை சுற்றி யார் யார் கடை வைத்து இருக்க வேண்டும். அதன் பிறகு கோயிலை சுற்றி யார் யார் வீடு கட்டி இருக்க வேண்டும் என படி படியாக மாற்றி கொண்டு வந்து விடுவார்கள். பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமூகநிதி பின்னுக்கு தள்ளப்படும். அதனால் வாக்காளர்கள் வழிப்புணர்வுடன் யார் வேட்பாளர்கள் என்று பாராமல் திமுக அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ராமர் கோயிலின் ₹8 ஆயிரம் கோடிக்கு வரி இல்லை; தமிழக கோயில்களை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் பாஜ appeared first on Dinakaran.