ஒட்டாவா: கனடாவில் இந்திய மாணவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சிராக் அன்ட்டில்(24). கனடா நாட்டில் உள்ள வான்கூவரில் தங்கி ஒரு பல்கலைகழகத்தில் கல்விபடித்து வந்தார். நேற்று முன்தினம் இவர் வான்கூவர் நகரில் ஒரு காரில் பயணித்துள்ளார். அப்போது, அந்த பகுதியில் துப்பாக்கிசுடும் கேட்டதையடுத்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் வந்து பார்த்த போது காரில் சிராக் அன்ட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து, வான்கூவர் காவல்துறை செய்தி தொடர்பாளர் டனியா விசின்டின்,‘‘ சிராக்கை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது யார்? அல்லது துப்பாக்கியால் சுட்டு அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை’’ என்றார். இதற்கிடையே சிராக்கின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக அவருடைய குடும்பத்தினர் சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டி வருகின்றனர்.
The post இந்திய மாணவர் சுட்டு கொலை: கனடாவில் பயங்கரம் appeared first on Dinakaran.