- மோ
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வைகோ
- மத்யமிக்
- பொதுச்செயலர்
- வைகோ உதயசுரியன்
- சங்கரன்கொயில் தெராடி திடல்
- தென்காசி நாடாளுமன்ற தொகுதி
- திமுக
- ராணி ஸ்ரீகுமார்
- DMK வடக்கு மாவட்டம்
- ராஜா எம்.எல்.ஏ
- மோடி
தென்காசி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:மோடியின் பாசிச ஆட்சியை வீழ்த்துவதற்கு இந்தியா கூட்டணியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம்லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன.
பிரதமர் மோடி திராவிட கலாசாரத்தை நிறுத்தி விடுவேன் என்கிறார். திராவிடம் என்பது திராவிடர் கழகம், திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திராவிடத்தை சார்ந்தே உள்ளன. மோடியின் மோசடி வித்தைகள் தமிழ்நாட்டில் என்றென்றைக்கும் எடுபடாது. இந்தியாவில் மொரார்ஜி தேசாய், இந்திராகாந்தி, வி.பி.சிங், வாஜ்பாய் உள்ளிட்ட பல்வேறு பிரதமரிடம் நேரடியாக விவாதம் செய்திருக்கிறேன். ஆனால் மோடியை போல் பாசிச ஆட்சியை எங்குமே கண்டதில்லை. மதத்தை வைத்து பாஜவினர் அரசியல் செய்கிறார்கள்.
பாஜவின் மத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி நடத்தி வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் காலை உணவு திட்டம் கனடா நாட்டில் செயல்பட்டு வருகிறது. இது திமுகவின் நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாகும். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் ஜிஎஸ்டி பிரச்னை இருக்காது. நீட் தேர்வு முற்றிலுமாக அகற்றப்படும். புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும். பாசிச பாஜ ஆட்சியை அகற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
The post மோ(ச)டி வித்தை தமிழ்நாட்டில் எடுபடாது: வைகோ பேச்சு appeared first on Dinakaran.