கரூர், ஏப். 14: கரூர் மாவட்டத்தில் காவல் துறையினர் தபால் வாக்கு செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார்.கரூர் மாவட்டத்தில் காவல் துறையினர் தபால் வாக்கு செலுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தங்கவேல் நேற்று (13ம் தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலையொட்டி, வரும் 19ம் தேதி, வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கரூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் தங்களது தபால் வாக்கை நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 வரை செலுத்தும் வகையில் சிறப்பு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கரூர் மாவட்ட காவல் துறையில் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 1,285 காவல் துறையினர் கரூர், மாவட்ட ஆட்சியரகத்தில் தபால் வாக்கு செலுத்தும் வகையில் சிறப்பு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தபால் வாக்குப்பதிவு நடைபெறும் பணிகளை வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பார்வையிடும் வகையிலும், வாக்குப்பதிவு நடைமுறைகளை வீடியோ ஒளிப்பதிவு செய்திடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சையது காதர் , உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம் appeared first on Dinakaran.